இந்தியா-­மியன்மார்­-தாய்லாந்து நெடுஞ்சாலை 4 ஆண்டில் தயார்

இந்தியா-­மியன்மார்­-தாய்லாந்து நெடுஞ்சாலை 4 ஆண்டில் தயார்

1 mins read
158f44ce-17cc-4096-80b5-796b2bbef559
-

கோல்­கத்தா: இந்­தியா-மியன்­மார்-தாய்­லாந்து ஆகிய மூன்று நாடு­களை இணைக்­கும் தேசிய நெடுஞ்­சாலை கட்­ட­மைப்பு இன்­னும் நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் அமைத்து முடிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மேற்­கு­வங்­கா­ளத் தலை­நகர் கோல்­கத்­தா­வில் இந்­திய தொழில் வர்த்­தக சபை (சிஐஐ) இந்­திய வெளி­யு­றவு அமைச்சு ஆத­ர­வு­டன் வணிக மாநாட்டை நடத்­தி­யது.

தாய்­லாந்து, மியன்­மார் நாடு­களின் அமைச்­சர்­கள் அதில் பங்­கேற்­ற­னர்.

இந்­தியா-மியன்­மார்-தாய்­லாந்தை இணைக்­கும் முத்­த­ரப்பு தேசிய நெடுஞ்­சாலை குறித்து அப்­போது பேசப்­பட்­டது. தாய்­லாந்து வெளி­யு­ற­வுத் துறை இணை அமைச்­சர் பல விவரங்­களைத் தெரி­வித்­தார்.

அந்த 2,800 கி.மீ. நெடுஞ்­சாலை தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் தொடங்கி இந்­தி­யா­வின் கோல்­காத்­தா­வில் முடி­வடை­யும்.

அதில் 2,500 கி.மீ. இந்­தி­யா­வி­லும் மியன்­ம­ாரி­லும் அமை­யும். சாலை­யின் எஞ்­சிய குறைந்த பகு­தியே தாய்­லாந்­தில் அமை­கிறது.

தாய்­லாந்­தில் சாலை­ அமைக்கும் பணி நிறை­வ­டைந்­து­விட்­டது. இந்­தத் திட்­டம் முழுமை பெற இந்­தியா, மியன்­மா­ரில் சாலைப் பணி­கள் முடி­வ­டைய வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

கூட்­டத்­தில் பேசிய மியன்­மார் வர்த்­தக அமைச்­சர் இந்த நெடுஞ்­சாலை அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் தயா­ரா­கி­விடும் என்­றார்.