மணிப்பூர் வன்செயல்: பலி 115 ஆகியது; அமைச்சர் வீடு எரிப்பு

மணிப்பூர் வன்செயல்: பலி 115 ஆகியது; அமைச்சர் வீடு எரிப்பு

1 mins read
4f4878b0-124a-4d78-aa32-4a04a32ec267
-

இம்­பால்: இந்­தி­யா­வின் வட­கிழக்கு மாநி­ல­மான மணிப்­பூ­ரில் வன்­முறை ஒடுங்­கி­ய­தா­கத் தெரி­ய­வில்லை.

பாஜக ஆட்சி நடக்­கும் மணிப்­பூ­ரில் மைதேயி சமூ­கத்­தி­ன­ருக்­கும், குகி பழங்­கு­டி­யி­ன­ருக்­கும் இடையே கடந்த மாதம் 3ஆம் தேதி பெரும் கல­வ­ரம் ஏற்­பட்­டது.

மாநி­லத்­தில் பெரும்­பான்­மை­யாக உள்ள மைதேயி சமூ­கத்­தி­னர் தங்­க­ளுக்­குப் பழங்­கு­டி­யின அந்­தஸ்து கோரி வரு­கின்­ற­னர். இதற்கு குகி பழங்­கு­டி­யி­னர் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­னர்.

மணிப்­பூர் முழு­வ­தும் ராணு­வம், அசாம் ரைபிள் படை­யி­னர் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வந்­தா­லும் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நீடிக்­கின்­றன.

இம்­பால் மேற்கு மாவட்­டத்­தில் சாம்­பெல் பகு­தி­யில் அமைந்­துள்ள குகி சமூக பெண் அமைச்­ச­ரான நேம்சா கிப்­ஜென் என்­ப­வ­ரின் வீட்­டுக்கு யாரோ இரவு நேரத்­தில் தீ வைத்­து­விட்­ட­னர்.

முன்­ன­தாக நிகழ்ந்த துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வத்­தில் 11 பேர் மாண்­ட­னர். மணிப்­பூர் வன் செயலில் மாண்­டோர் எண்­ணிக்கை 115 ஆகக் கூடியது.