ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று காலை (ஜூன் 16) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இங்குள்ள ஜாமகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக காஷ்மீர் கூடுதல் டிஜிபி விஜயகுமார் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் இன்று அதிகாலை தொடங்கியது. வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் ஜாமகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்தத் தகவலின் அடிப்படையில் என்கவுன்ட்டர் மேற்கொள்ளப்பட்ட்து. என்கவுன்ட்டரில் ஐந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

