குஷிநகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து குழந்தைகளின் உயிரிழந்தன.
சென்ற புதன்கிழமை குஷிநகர் மாவட்டம், உர்தா என்ற கிராமத்தில் சங்கீதா என்ற பெண், தனது 5 குழந்தைகளுடன் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் இவர்கள் வீடு தீப்பற்றியதில் அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் ஆறு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அப்பெண்ணின் கணவர் காற்றுக்காக வீட்டுக்கு வெளியில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் தீ மூண்டது. ஆனால் எப்படி தீ மூண்டது என்பது பற்றி விவரமில்லை. காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது.

