புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.500 மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புப் துறை அமைச்சகம் கையெழுத் திட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் 1,035 வானொலி தொலைதொடர்பு உபகரண பெட்டகங்களை கொள்முதல் செய்வதற்காக ஐதராபாத்தில் உள்ள ஐகாம் (ICOMM) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய ராணுவத்திற்கு நடப்பு நிதி ஆண்டில் இருந்து தொலை தொடர்பு உபகரண பெட்டகங்களின் விநியோகம் தொடங்க உள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் மொபைல் தொலை தொடர்பு சேவையின் நீண்டகால தேவை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வல்லரசு நாடுகளின் ராணுவங்களில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் அதிநவீன தொழில்நுட்பம் உள்ள 'எம்.க்யூ- 9 பிரிடேட்டர்' எனப்படும் ஆளில்லா வானூர்திகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க, இந்திய ராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 21 முதல் 24ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படும், பிரிடேட்டர் ரக 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா அதிநவீன சிறிய விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கை யெழுத்தாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த நவீன ஆளில்லா விமானங்களை அதிகமான உயரத்திலிருந்து இயக்க முடியும். எதிர்தரப்பின் இலக்குகளை கண்காணித்து மிகத் துல்லியமாக கணிப்பதுடன், ஆயுதங்களை சுமந்து அவற்றை குறிபார்த்து தாக்குவதற்கும் இந்த வகை ட்ரோன்களை பயன்படுத்த முடியும். அமெரிக்க தயாரிப்பான இந்த வகை ட்ரோன்கள், அந்நாட்டு ராணுவத்தில் பெரும் பங்களிப்பை செய்து வருகின்றன.