ராஜஸ்தானை நோக்கி பாயும் புயல்

2 mins read
63c8b983-f101-4136-b8a0-ea585a9f496d
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தைக் கடந்த சில நாட்­க­ளாக அச்­சு­றுத்­திய பிபர்­ஜாய் புயல் கரை­யைக் கடந்த நிலை­யில் அது ராஜஸ்­தானை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருப்­ப­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

அர­பிக் கட­லில் உரு­வான பிபர்­ஜாய் புயல், குஜ­ராத்­தின் கட்ச் மாவட்­டத்­தில் உள்ள ஜாக்­குவா போர்ட் அருகே நேற்று முன்­தி­னம் மாலை கரை­யைக் கடந்­தது. புயல் கரை­யைக் கடந்­த­போது மணிக்கு 115 கிலோ மீட்­டர் வேகத்­தில் காற்று வீசி­யது. இந்த புயல் கார­ண­மாக இரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். 23 பேர் காயம் அடைந்­துள்­ள­னர்.

ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட மரங்­களும் ஏரா­ள­மான மின்­சா­ரக் கம்­பங்­களும் முறிந்து கீழே விழுந்­துள்­ளன. சில இடங்­களில் டிரான்ஸ்­பார்­மர்­களும் கீழே விழுந்­துள்­ளன.

இத­னால், கட்ச் மாவட்­டம் உட்­பட குஜ­ராத்­தின் ஒரு சில மாவட்­டங்­களில் மின்­சா­ரம் தடை­பட்­டுள்­ளது. 940 கிரா­மங்­களில் மின்­சா­ரம் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தொடர்ந்து கன­மழை பெய்து வரு­வ­தால் சாலை­களில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கிறது. காற்­றும் வேக­மாக வீசி வரு­வ­தால் கட­லோர மாவட்ட மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

வானிலை அசா­தா­ர­ண­மாக இருப்­ப­தால் தற்­போது மக்­கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்­டாம் என்­றும் புயல் முழு­மை­யாக கடந்த பிறகு வெளியே வர­லாம் என்­றும் பூஜ் மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் பொது­மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

பொக்­லைன் இயந்­தி­ரங்­க­ளைக் கொண்டு பல்­வேறு இடங்­களில் மரங்­களை அப்­பு­றப்­ப­டுத்­தும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. முதல்­வர் பூபேந்­திர படேல், புயல் பாதிப்பு குறித்து காந்தி நக­ரில் ஆய்வு மேற்­கொண்­டார்.

இதற்­கி­டையே குஜ­ராத்­தில் கரை­யைக் கடந்த பிபர்­ஜாய் புயல், ராஜஸ்­தானை நோக்கி நகர்ந்து வரு­கிறது. புயல் கார­ண­மாக ராஜஸ்­தா­னின் ஜலோர், பார்­மெர் மாவட்­டங்­களில் கன­மழை பெய்து வரு­கிறது. மணிக்கு 60-70 மில்லி மீட்­டர் மழை பதி­வாகி வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்ள வானிலை ஆய்வு மையம், இவ்­விரு மாவட்­டங்­க­ளுக்­கும் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அதி­க­பட்­ச­மாக 200 மில்லி மீட்­டர் மழை பதி­வா­க­லாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

புயல் ராஜஸ்­தானை நோக்கி நகர்­வதை அடுத்து அம்­மா­நி­லத்­தில் மாநி­லப் பாது­காப்­புப் படை­யின் 17 குழுக்­கள் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதனை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்த ராஜஸ்­தான் தலை­மைச் செய­லர் உஷா ஷர்மா, புயல் பாதிப்­பு­களை எதிர்­கொள்ள உய­ர­தி­கா­ரி­கள் கூட்­டம் நடை­பெற்­றது. இதில், எடுக்­கப்­பட வேண்­டிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்து அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது என்­றார்.