சாக்‌ஷி மாலிக்: வழக்கை திரும்பப் பெற சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம்

1 mins read
21113a23-4bc0-4efe-8b6d-93a3c716210c
-

புதுடெல்லி: மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டை திரும்பப் பெறக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

அத்துடன், குற்றப் பத்ரிகையில் பிரஜ் பூஷண் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் பிற கோரிக்கைகளை அரசு பரிந்துரை செய்தபிறகு அடுத்தகட்ட நட வடிக்கைகள் குறித்து முடி வெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேள னத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், அமித் ஷா ஆகியோரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சிறுமி ஒருவர் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை கைவிட வேண்டும் என்று டெல்லி காவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.