பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜூன் 23ல்

2 mins read
4283ffa2-ecc0-46bb-8daa-5553648621a9
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் முன்­கூட்­டியே நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்த வாய்ப்­புள்­ளது என்று பீகார் முதல்­வர் நிதீஷ் குமார் எச்­ச­ரித்­துள்­ளார்.

மத்­தி­யில் ஆளும் பாஜக அர­சுக்கு எதி­ராக வலு­வான கூட்­ட­ணியை அமைக்­கும் முயற்­சி­யில் தேசிய அள­வில் பல்­வேறு கட்­சி­கள் முக்­கிய முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றன.

காங்­கி­ரஸ் கட்­சி­யும் பாஜ­கவை எதிர்க்­கும் மாநி­லக் கட்­சி­க­ளு­டன் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வது குறித்து ஆலோ­சித்து வரு­கிறது. ஆனால் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு இடையே பிளவு ஏற்­பட்டு மூன்­றா­வது அணி அமைக்­கப்­பட்­டால் அது பாஜ­க­வுக்கு சாத­க­மாக அமை­யும்.

எதிர்­க்கட்­சி­கள் ஒரே குடை­யின் கீழ் ஒன்­றி­ணைய வேண்­டும் என்­ப­தற்­காக பீகார் தலை­ந­கர் பாட்­னா­வில் ஜூன் 23ஆம் தேதி எதிர்­க்கட்­சி­க­ளின் கூட்­டம் நடை­பெற உள்­ளது. இந்­தக் கூட்­டத்­தில் தமிழ்­நாடு முதல்­வர் மு.க. ஸ்டா­லின், மேற்­கு­வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி, காங்­கி­ரஸ் தலை­வர்­கள் மல்­லி­கார்­ஜுன கார்கே, டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், ராகுல் காந்தி, உத்­த­ரப்­பி­ர­தேச முன்­னாள் முதல்­வர் அகி­லேஷ் யாதவ், உத்­தவ் பாலா­சா­கேப் தாக்­கரே கட்­சித் தலை­வர் உத்­தவ் தாக்­கரே, தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத்­ப­வார், சிபிஐ தேசிய செய­லா­ளர் டி. ராஜா, சிபி­எம் தலை­வர் சீதா­ராம் யெச்­சூரி, சிபிஐ- எம்­எல் திபாங்­கர் பட்­டாச்­சார்யா உள்­ளிட்­டோர் கலந்துகொள்ள இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கிறது.

அதே சம­யத்­தில் எதிர்­க்கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து வலி­மை­பெற்­று­வி­டக்­கூ­டாது என்­ப­தில் பாஜக அரசு எச்­ச­ரிக்­கை­யாக உள்­ளது.

இந்த நிலை­யில் முன்­கூட்­டியே நாடா­ளு­மன்­றத் தேர்­தலை ஆளும் பாஜக நடத்­த­லாம் என்று பீகார் முதல்­வர் நிதீஷ் குமார் மீண்­டும் மீண்­டும் எச்­ச­ரித்து வரு­கி­றார்.