செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
a8b85c41-08c4-4bbf-8ed0-fb30beddfb9d
-

வழிபாட்டுத் தலம் இடிப்பு;

வன்முறை வெடித்தது

காந்­தி­ந­கர்: குஜ­ராத் மாநி­லம் ஜுனாஹா மாவட்­டத்­தின் ஜூனாஹா நக­ரில் உள்ள இஸ்­லா­மிய மத வழி­பாட்டுத் தலத்­துக்கு அருகே அரசு நிலத்தை ஆக்­கி­ர­மித்து தர்க்கா கட்­டப்­பட்­டுள்­ளது. இதை அகற்ற அதி­கா­ரி­கள் முயற்சி நேற்று செய்­த­போது வன்­முறை வெடித்­தது.

வெள்­ளிக்கிழமை இரவு இஸ்­லா­மிய மதத்­தி­னர் திடீ­ரென போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­ப­கு­தி­யில் நிறுத்­தப் பட்­டி­ருந்த வாக­னங்­க­ளுக்குத் தீ வைத்த வன்­முறையாளர்­கள் காவல்­துறை சோதனை சாவ­டி ­க­ளைத் தாக்­கி­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் டிஎஸ்பி உள்­பட மூன்று காவ­லர்­கள் காயமடைந்­த­னர் என்று தினத்­தந்தி நாளேடு தெரி­வித்­தது. வன்­முறை கட்­டுக்­க­டங்­கா­மல் போன­தால் அப்­ப­கு­தி­யில் காவல்­துறையினர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். வன்­மு­றை­யில் குறைந்தது ஒரு­வர் உயிரிழந்­தார். பலர் காயம் அடைந்தனர். 175 பேர் கைது செய்­யப்­பட்­டுள்ளனர்.

கர்நாடகாவில் பாஜக மீது

ஊழல் புகார்; விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அம்மாநிலத்தின் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இந்த நிலையில் அமைச்சர் பிரியங்க் கார்கே, முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து வெவ்வேறு வகையான ஊழல் புகார்கள் உள்ளதால், வெவ்வேறு ரீதியில் குழுக்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றார்.