கேங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நிலச்சரிவு, சாலைத் துண்டிப்பு காரணமாக சிக்கித் தவித்த ஏறத்தாழ 3,500 சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக குறுக்குப் பாதையைப் போட்டு சுற்றுப் பயணிகள் ஆற்றைக் கடக்க ராணுவத்தினர் உதவினர்.
பாதுகாப்பாக வெளியேறிய பயணிகளுக்குச் சூடான உணவு, தங்குமிடம், தேவையான மருத் துவ உதவிகளும் வழங்கப்பட்டன.
சிக்கிமின் லாச்சென், லாச்சுங், சுங்தாங் பள்ளத்தாக்கு பகுதிகள் வெள்ளிக்கிழமை கனமழையால் பாதிக்கப்பட்டன. இதனால், வடக்கு சிக்கிம் மாவட்டத் தலை நகரான மங்கனில் இருந்து சுங்தாங் செல்லும் சாலை துண் டிக்கப்பட்டு வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அத் துடன், ஆங்காங்கே நிலச்சரி வாலும் பயணிகள் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து திரிசக்தி கார்ப்ஸ் படையினர், ராணுவம், எல்லைப்புற பகுதிகளில் சாலை கள் அமைக்கும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கூட்டாக இணைந்து களமிறங்கினர்.
கனமழை, சீரற்ற காலநிலைக்கு இடையிலும் தற்காலிகப் பாதையை அமைத்து பயணிகள் ஆற்றைக் கடக்க உதவினர்.
சனிக்கிழமை மாலை வரை 3,500 பயணிகள் மீட்கப்பட்டனர்.
அடுத்த சில தினங்களுக்கு சிக்கிமில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சிக்கிமில் பெய்த கனமழையால் லாச்சென், லாச்சுங், சுங்தாங் பள்ளத்தாக்குகள் பாதிப்புக்கு ஆளாகின. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியில் ராணுவத்தினர் தற்காலிகப் பாதையை அமைத்து சுற்றுப்பயணிகள் ஆற்றைக் கடக்க உதவினர். பாதுகாப்பாக வெளியேறிய பயணிகளுக்குச் சூடான உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகளை வழங்கவும்
அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
படம்: ஏஎஃப்பி

