துப்பாக்கிச் சூட்டுக்கு இரு பெண்கள் பலி

துப்பாக்கிச் சூட்டுக்கு இரு பெண்கள் பலி

1 mins read
a57f327b-0e22-45b7-a4c0-a5a9651c9569
-

புது­டெல்லி: தென்­மேற்கு டெல்­லி­யின் ஆர் கே புரம் பகு­தி­யில் அடை­யா­ளம் தெரி­யாத நபர்­களால் இரு பெண்கள் சுட்­டுக்கொல்­லப்­பட்டனர்.

இறந்­த­வர்­கள் பிங்கி, 30, ஜோதி, 29, என அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர்.

அம்­பேத்­கர் பஸ்­தி­யில் தனது சகோ­த­ரி­கள் மீது துப்­பாக்­கிச்சூடு நடத்­தப்­பட்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்களின் சகோ­த­ர­ரி­ட­மிருந்து நேற்று அதி­காலை 4.40 மணி­ய­ள­வில் அழைப்பு வந்­ததாக காவல்­துறையினர் தெரி­வித்தனர்.

"இரண்டு பெண்­கள் சுடப்­பட்ட நிலையில், எஸ்ஜே மருத்­து­வ­மனைக்கு கொண்டு செல்­லப்­பட்­டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்­த­னர்," என்று தென்­மேற்கு டெல்லி காவல்­துறை துணை ஆணை­யர் மனோஜ் சி கூறினார்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், கொலை­யா­ளி­கள் பாதிக்­கப்­பட்ட­வ­ர்களின் சகோ­த­ர­ரைப் பின்­தொ­டர்ந்­துள்ளனர் என்றும் இந்தச் சம்­ப­வத்­தின் பின்­ன­ணி­யில் பணத் தக­ராறு இருந்துள்ளது தெரி­கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொலை தொடர்­பாக முக்­கிய குற்­ற­வாளியும் அவ­ரது கூட்­டா­ளி­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக டெல்­லி­ காவல்­துறையின் துணை ஆணை­யர் மனோஜ் சி கூறியுள்ளதாக ஏஎன்ஐ ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.