தவறான தடுப்பூசியால் 100 தெருநாய்கள் பலி

1 mins read
a55697e9-41cb-436c-86a9-fd14be8f5912
ஆந்திர மாநிலம், முப்பல்லா கிராமத்தில் தவறான ஊசி செலுத்தியதால் தெருநாய்கள் பலியாயின. - படம்: ஏஎஃப்பி

திருப்பதி: ஆந்திர மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெருநாய்த் தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, பிரச்சினைக்குத் தீர்வுகாண அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து கூண்டுகளில் அடைத்தனர்.

அவர்கள் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசிக்குப் பதிலாக தவறான ஊசியைப் போட்டுவிட்டனர். இதனால் அந்த நாய்கள் இறந்தன. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அலட்சியமாகப் பணியாற்றிய கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதியைப் பணியிடைநீக்கம் செய்தார். மேலும் விளக்கம் கேட்டு மூன்று அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்