கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தன் விமான சேவையை ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
இது குறித்து , “சில செயல்பாட்டுக் குறைகள் காரணமாக எங்களது நிறுவனத்தின் விமான சேவைகள் ஜூன் 22ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுகின்றன,” என்று கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து நிதி வேறு கணக்குகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளதா என்பதை ஆராய தணிக்கை நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்ளப்போவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக, அந்நிறுவனம் தனது விமான சேவையை மே 3ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதிவரை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

