வாந்தி, வயிற்றுப்போக்கு; புதுமணப்பெண் மரணம்

வாந்தி, வயிற்றுப்போக்கு; புதுமணப்பெண் மரணம்

1 mins read
637bf6f3-e453-464d-aadb-b3965e0831b0
கடும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மணப்பெண் மரணம் அடைந்தார். - ஃபேஸ்புக்
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான இரண்டு நாள்களிலேயே மணப்பெண் உயிரிழந்தார். 21 வயது ரோஷ்னிக்கும் 22 வயது முக்தார் அகமதுக்கும் இம்மாதம் 17ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மறுநாள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ரோஷ்னிக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் அவர் அவதியுற்றார். இதையடுத்து அன்றிரவு ரோஷ்னியை அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். திருமணமாகி வெறும் இரண்டு நாள்களிலேயே மணப்பெண் மரணம் அடைந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணப்பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்