தாம்பத்திய உறவில் நாட்டமில்லை; கணவர் மீதான வழக்கு தள்ளுபடி

தாம்பத்திய உறவில் நாட்டமில்லை; கணவர் மீதான வழக்கு தள்ளுபடி

1 mins read
f4ac6928-5347-4c3d-9e34-764b54f8c86b
திருமணமாகியும் தம்முடன் தாம்பத்திய உறவில் ஈடுபடாத கணவருக்கு எதிராக மனைவி வழக்கு தொடுத்திருந்தார். - ஃபேஸ்புக்

பெங்களூரு: திருமணமாகியும் மனைவியுடன் கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபடாதது இந்திய சட்டப்படி குற்றமில்லை என்று கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாறாக, இந்து சமய திருமணச் சட்டத்தின்கீழ் அது மனைவிக்குக் கொடுமை செய்வதாக கருதப்படும் என்று அது கூறியது.

2020ஆம் ஆண்டில் தமது கணவர், அவரது பெற்றோர் ஆகியோருக்கு எதிராகப் பெண் ஒருவர் தொடுத்த வழக்கிற்காக இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த ஆடவர் தாம் குறிப்பிட்ட ஓர் ஆன்மிக முறையைப் பின்பற்றுவதாகவும் தாம்பத்திய உறவில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மாறாக, இரு ஆன்மாக்கள் ஒன்றிணைவதே காதல் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

அந்த ஆடவரின் நிலைப்பாடு, செயல் இந்திய சட்டத்தின்கீழ் குற்றமில்லை என்று தீர்ப்பளித்த நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

குறிப்புச் சொற்கள்