புவனேஸ்வர்: ஒடிசாவின் நுவாபாடா பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பிலிருந்து விலை உயர்ந்த மாம்பழ ரகங்கள் திருட்டுப்போயின. திருட்டுப்போன மாம்பழங்களின் விலை கிலோ 2.5 லட்சம் ரூபாய் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த விவசாயி லட்சுமி நாராயணன். அவரது மாந்தோப்பில் 38 வகையான மாமரங்கள் இருக்கின்றன. அவர் தான் விளைவித்த மாம்பழ வகைகள் பற்றிய தகவல்களையும் அவற்றின் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இதில் உயர்வகை மாம்பழங்களும் அடங்கும்.
அவற்றைப் பற்றி அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த சில மணி நேரங்களில், அந்த விலை உயர்ந்த மாம்பழங்களில் நான்கு திருட்டுப் போயின. அதனைக் கண்டு அவரும் உள்ளூர் மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த மாம்பழத் திருட்டு வேளாண் விளைபொருள்களுக்கான பாதுகாப்பு குறித்தும் அது உள்நாட்டுப் பொருளியலில் ஏற்படுத்தவல்ல தாக்கம் குறித்து கவலை எழுப்பியுள்ளது.

