போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் இளையர் ஒருவரைத் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் ராம்சந்தானி என்ற இளையரின் கழுத்தில் விலங்குகளுக்குக் கட்டப்பட்டும் கயிற்றைக் கட்டி சந்தேக நபர்கள் துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்யை நாய்போல் குறைக்கச் சொல்லியும் அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். மேலும் அவர்களில் சிலர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஏன் மௌனம் காக்கிறது என்று பாஜக கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தராகண்ட், வெளிநாடுகளில் நடக்கும் துன்புறுத்தல் சம்பவங்களை டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் தலைவர்கள் ஏன் போபால் சம்பவத்தைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பாஜகவினர் கேட்டுள்ளனர்.


