மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற கொவிட்-19 மோசடி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜய்ஸ்வால் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியுள்ளது.
உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவுடன் நெருக்கமான இருவரின் வீடுகளிலும் சோதனை இடம்பெற்றது.
ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான சூரஜ் சவன், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடந்தது.
மும்பை நகரிலும் சுற்று வட்டாரங்களில் உள்ள தானே, நவி மும்பை ஆகிய பகுதிகளிலும் 15 இடங்களில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியது.
திரு ஜய்ஸ்வால், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் தானே மாநகர ஆணையராகவும் மும்பை மாநகருக்கான கூடுதல் ஆணையராகவும் செயல்பட்டவர்.