புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எஃப்-414 ரக போர் விமான இயந்திரத்திற்கான ஒப்பந்தம் கையொப்பமான நிலையில் விமான மேம்பாட்டு அமைப்பும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டும் இணைந்து தேஜாஸ் மார்க் 2 போர் விமானத்தை 2027-2028ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.
இதன்மூலம் விமான மேம்பாட்டு அமைப்பு அவ்விமானத்திற்கான ‘ஜிஇ-414’ மாதிரி இயந்திரத்தை 2024 ஆண்டுக்குள் தயாரிக்க வேண்டும்.
‘ஜிஇ-414’ இயந்திரம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அதற்கான தொழில்நுட்ப உதவிகள் அனைத்தையும் இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கும்.
தொழில்நுட்ப உதவிகள் பெற்றால் இந்தியாவின் போர் விமான உற்பத்திக்கு அது பெரும் வெற்றியைத் தரக்கூடும்.
இந்திய அரசாங்கம் அதன் ஆகாயப்படைக்கு குறைந்தது ஆறு குழு கொண்ட மார்க் 2 போர்விமானங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

