ஜோஷிமத் நிலைமை மோசமாகலாம்: நிபுணர்கள் கவலை

ஜோஷிமத் நிலைமை மோசமாகலாம்: நிபுணர்கள் கவலை

1 mins read
3c04c3ff-93f1-4f29-8037-85200a12941a
ஜோஷிமத் பகுதியில் ஏறக்குறைய 868 கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. - படம்: இந்திய ஊடகம்

டேராடூன்: மழைக்காலம் நெருங்கிவரும் நிலையில், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், ஜோஷிமத் மாவட்ட நிர்வாகத்தினரும் நிபுணர்களும் அப்பகுதியின் நில உறுதியின்மை குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.

இதுவரை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஜோஷிமத் பகுதியில் ஏறக்குறைய 868 கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. 181 கட்டடங்கள் பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிசல்களில் மழைநீர்நிரம்புவதால் ஏற்படும் விளைவுகளை நிபுணர் குழு அடங்கிய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

ஜோஷிமத் பகுதியில் நில உறுதியின்மை மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜோஷிமத் நிலப் புதைவுக்குப் பிறகு அறிவியல் கழகங்கள் தங்களது அறிக்கைகளை உள்துறை அமைச்சிடமும் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்திடமும் சமர்ப்பித்திருப்பதாக சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா ஊடகங்களிடம் தெரிவித்தார். அந்த அறிக்கைகள் தொடர்பில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட 502 குடும்பங்களில் கிட்டத்தட்ட 437 குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 65 குடும்பங்கள் வெவ்வேறு ஹோட்டல்களில் வசித்து வருவதாகவும் நீதிபதி குரானா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்