36 ஆண்டுகளாக இரட்டைக் குழந்தை பிண்டத்தைச் சுமந்த முதியவர்

36 ஆண்டுகளாக இரட்டைக் குழந்தை பிண்டத்தைச் சுமந்த முதியவர்

2 mins read
17594f77-c496-4c36-93cd-80f91caaf0eb
கை, கால்கள், தாடைகள், மற்றும் சில உறுப்புகளுடனான இரட்டைக் குழந்தைகள் போன்ற பிண்டத்தை கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றில் சுமந்து வந்த சஞ்சு பகத். - படம்: இந்திய ஊடகம்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர் சஞ்சு பகத். 1963ஆம் ஆண்டில் பிறந்த இவருக்குச் சிறு வயது முதலே வயிறு மிகவும் பெரிதாக இருந்து வந்தது.

எனினும், ஆரோக்கியமாக இருந்ததால் தனது 20 வயது வரை வயிற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்துவந்தார்.

அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வேலை பார்த்து வந்த இவரது வயறு நாளடைவில் பலூன் போல பெரிதாகக் காணப்பட்டது.

இருப்பினும், சஞ்சு பகத் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர்ந்து வந்தார்.

எனினும், அவரது நண்பர்களும் அப்பகுதி மக்களும் சஞ்சுபகத்தை ‘கர்ப்பிணி’ போல் இருப்பதாக கேலி செய்து வந்தனர்.

ஒரு சமயத்தில் வயிறு வீக்கம் காரணமாக அவரால் மூச்சு விட முடியாமல் போனது.

இதையடுத்து கடந்த 1999ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்ற அவரை மருத்துவர் அஜய்மேத்தா பரிசோதித்து வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்தார்.

இதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது அவரது வயிற்றில் கை, கால்கள், தாடை, மேலும் சில உறுப்புகளுடன் ஒரு பிண்டம் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் அவர் இரட்டைக் குழந்தைகள் போன்ற பிண்டத்தைச் சுமந்துகொண்டு இருப்பது தெரியவந்தது.

இவ்வகை நோய் பாதிப்பு என்பது பிறக்காத இரட்டைக் குழந்தைகளின் உருவில் ஒரு ஒட்டுண்ணிபோல் வயிற்றுக்குள் வளர்கிறது.

பின்னர் இரட்டைக் குழந்தைகள் போன்ற பிண்டத்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். அகற்றப்பட்ட பிண்டத்தை சஞ்சு பார்க்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
குழந்தை