பாஜக நிகழ்ச்சியில் மோதல், துப்பாக்கிச்சூடு

1 mins read
b52ec4be-3197-456c-a35e-4e5169c1d5b0
கட்சியினரிடையே கைகலப்பு. காயமடைந்தவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலம் மதிப்பூரா மாவட்டம் முர்லிகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாஜக கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில் பாஜக தொண்டர்கள் ஒருவர் மீது ஒருவர் அங்கிருந்த இருக்கைகளை வீசி தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த பங்கஜ் என்ற பாஜக நிர்வாகி தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் திடீரென சக கட்சியினரை நோக்கி சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார். துப்பாக்கிச்சூட்டில் சஞ்சய் பகத் என்ற பாஜக நிர்வாகியில் காலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சஞ்சயை சக நிர்வாகிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய பாஜக நிர்வாகியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில பிரச்சினைகள் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குழுக்கள் ஒருவர் மீது லத்திகளை வீசித் தாக்குவதை தொலைக்காட்சிப் பதிவுகள் காட்டின.

கட்சியின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்