தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெடுஞ்சாலையில் இறங்கி ஏறி சாகசம் புரிந்த போர் விமானங்கள்

1 mins read
3accad84-9e68-4f2e-9c3d-b791aa4f5ff9
பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற சாகசப் பயிற்சியின்போது தரையைத் தொட்டு மீண்டும் வானில் எழும்பிப் பறந்த விமானப் படையின் போா் விமானம். - படம்: இந்தியா டைம்ஸ் ஊடகம்

சுல்தான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ முதல் காஜிப்பூர் வரை 341 கி.மீ. நீளத்துக்கு பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை உள்ளது.

இந்தச் சாலையில், பார்வையாளர்களின் ஆரவாரத்துடன் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் தரையிறங்கும் பயிற்சியில் ஈடுபட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் இறங்கி ஏறும் பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய், மிராஜ் போர் விமானங்கள் ஈடுபட்டன.

அதற்காக இந்த நெடுஞ்சாலையின் குரேபார் பகுதியில் 12 கி.மீ. தூரத்துக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு, ‘டச் அண்ட் கோ’ பயிற்சியில் போர் விமானங்கள் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஜெய்சிங்பூர் எம்எல்ஏ ராஜ் பாபு, மாவட்ட நீதிபதி ஜஜித் கவுர், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

அத்துடன், சுற்றுப்புறங்களில் உள்ள இருபது கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு இந்த நிகழ்வைப் பார்த்து ரசித்து உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.

இப்பயிற்சியின்போது நெடுஞ்சாலையின் குறுக்கே ஒருநாய் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, அவ்வாறு நாய்கள் குறுக்கே செல்லாமல் தடுப்பதற்காகக் காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்