திருமலை: : திருமலையில் தரகர்கள் கும்பல், பக்தர்களிடம் பணம் வசூலிப்பதை முற்றிலுமாக ஒழிக்கவே ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டம் அமல்படுத்தப்பட்டது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி விளக்கியுள்ளார்.
இதனை சிலர் அரசியல் சுய லாபத்திற்காக தேவஸ்தானம் மீது வீண் பழியை சுமத்துகின்றனர். இதுவரை 70 இடைத்தரகர்களை கைது செய்யப்பட்டு, மொத்தம் 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியிலேயே 2018-ல் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. 2019ல் அதனை மீண்டும் தொடங்கி, இதில் கிடைக்கும் வருமானம் மூலம் புதிய கோயில்கள் கட்டுவது, பழமையான கோயில்களை புதுப்பிப்பது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.


