தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய வம்சாவளி மருத்துவருக்கு ஆறாண்டு சிறை

1 mins read
f4d89038-2f99-4dfd-81ef-f795b11b922f
டாக்டர் கபிர் கார்க் என்ற இந்த மருத்துவருக்கு ஜூன் 23ஆம் தேதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  - படம்: பிபிசி

லண்டன்: இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவருக்கு லண்டனில் ஆறாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சிறார் பாலியல் கொடுமை தொடர்பான இணையத்தளம் ஒன்றை நடத்தியதன் தொடர்பில் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்து இருக்கிறது.

லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லெவிஷாம் என்ற வட்டாரத்தைச் சேர்ந்த டாக்டர் கபிர் கார்க், 33, என்ற அந்த மருத்துவர், ‘தி அனெக்ஸ்’ என்ற இணையத்தளத்தை நிர்வகித்து நடத்தியவர்களில் ஒருவர் என்று பிரிட்டனின் குற்றச்செயல் முகவை அமைப்பு அடையாளம் கண்டதாக பிபிசி அறிக்கை குறிப்பிட்டது.

அந்த இணையத்தளத்தை உலகம் முழுவதும் 90,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பின்தொடர்ந்தனர்.

பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அந்த மருத்துவரின் பெயர் சேர்க்கப்பட்டது.

டாக்டர் கபிருக்கு ஜூன் 23ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கடந்த ஜனவரி மாதமே குற்றங்களை ஒப்புக்கொண்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்