புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட தோழமை உறவு உலக நன்மைக்கான ஒரு சக்தி என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கிறார்.
அந்த உறவு காரணமாக உலகம் இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த நிலையை எட்டும் என்றும் இயற்கை வளங்களுடன் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் அந்த உறவு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவு இப்போது உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது அது முன்பைவிட அணுக்கமானதாக, வலுவாக ஆகி இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வர்ணித்து இருப்பது பற்றி பிரதமரிடம் கேட்கப்பட்டது.
இந்தியா திரும்பியதும் அமெரிக்க அதிபரின் கருத்து தொடர்பில் திரு மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.