ஆசியாவில் அதிக வர்த்தக வருவாய் போட்டி: இந்தோனீசியாவை விஞ்சும் நிலையில் இந்தியா

ஆசியாவில் அதிக வர்த்தக வருவாய் போட்டி: இந்தோனீசியாவை விஞ்சும் நிலையில் இந்தியா

2 mins read
b02d3d65-aa77-4948-8951-abe6e2dad546
இந்திய ரூபாய், தொழில்துறை இடர்களுக்கு அதிக இழப்பீட்டைத் தருவதாக இருக்கிறது. இந்த விகிதாச்சாரம் 2.8% ஆக உள்ளது. இந்தோனீசியாவின் ரூப்பியாவைப் பொறுத்தவரை இது 0.5% ஆக இருக்கிறது என்று புளூம்பர்க் தெரிவிக்கிறது. - படம்: ஏஎஃப்பி 

ஆசியாவிலேயே ஆக அதிக பலன் அளிக்கக்கூடிய இரண்டு பெரும் சந்தைகளாக இந்தியாவும் இந்தோனீசியாவும் திகழ்கின்றன.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் இந்தோனீசியாவை இந்தியா விஞ்சிவிடக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் இதுவரையில் வருவாயைப் பொறுத்தவரை இந்தோனீசியாவின் ரூப்பியாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியாவின் ரூபாய் இருந்து வந்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் நிலைமை மாறும் என்று தெரிகிறது.

ஹெச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ், அமுண்டி உள்ளிட்ட முதலீட்டாளர்கள் இந்தியாவின் ரூபாய் நாணயமே அதிக வருவாயைத் தரக்கூடியதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

தொழில்துறை இடர்களைப் பொறுத்தவரை இந்திய நாணயம், இந்தோனீசியாவின் ரூப்பியாவைவிட அதிக இழப்பீடு தருகிறது.

இந்தோனீசியாவின் ரூப்பியாவைப் பொறுத்தவரை இந்த அளவு 0.5% ஆக இருக்கிறது. ஆனால் இந்திய ரூபாயைப் பொறுத்தவரை இது 2.8% ஆக இருக்கிறது என்று புளூம்பர்க் நிறுவனம் தொகுத்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வெளிநாட்டினர் இந்தக் காலாண்டில் இதுவரை இந்தியப் பங்குச் சந்தையில் US$10 பில்லியன் பணம் போட்டு இருக்கிறார்கள். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது.

அதிவேகமாக வளர்ச்சி அடையக்கூடிய உலகளாவிய முக்கிய பொருளியல்களில் இந்தியப் பொருளியலும் ஒன்றாக இருக்கிறது.

முதலீட்டாளர்கள் இப்போது இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள்.

பத்து ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய இந்திய முறிகள் (பாண்ட்) 7.07% வருவாயைத் தருகின்றன. இந்த வருவாய் அதேபோன்ற இந்தோனீசிய முறிகளைப் பொறுத்தவரை 6.30% ஆகத்தான் இருக்கிறது.

இந்திய ரூபாய் திங்கள்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக 0.1% மதிப்பு கூடி ஒரு டாலருக்கு 81.9550ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்