மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 63,228 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அம்மாநிலத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார்.
தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக மம்தா பானர்ஜி, ஜல்பைகுரி மாவட்டத்தின் மால்பஜார் பகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
அப்போது ஒரு பெண் நடத்தி வரும் தேநீர்க்கடைக்குச் சென்ற முதலமைச்சர் மம்தா, அங்கிருந்து தன் கையால் தன் ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் தேநீர் கலக்கிக் கொடுத்தார். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.