தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரு-தார்வார் இடையே அதிவேக ரயில் சேவை தொடங்கியது

2 mins read
bb184058-1f6e-4836-8503-7f4504d7c1f8
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வந்தே பாரத் ரயில். - படம்: ஊடகம்

பெங்களூரு: தார்வார் - பெங்களூரு இடையே அதிவேக (வந்தே பாரத்) ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (27.6.2023) கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை-மைசூரு இடையே அதிவேக ரயில் சேவை கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ரயில் சென்னை-மைசூரு ஆகிய இரு நகரங்களுக்கு இடையேயான 500 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 6½ மணி நேரத்தில் கடந்துவிடும். இது தென்இந்தியாவின் முதல் அதிவேக ரெயில் ஆகும்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திற்குள் பெங்களூரு-தார்வார் இடையே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்தது. அதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கு ரயில் சேவை தார்வார் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது. ரயில் மூலம் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் வசிக்கும் மக்கள், விரைவாக தலைநகர் பெங்களூருக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

எட்டுப் பெட்டிகளை கொண்ட இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டும் இயங்கும். செவ்வாய்க்கிழமைகளில் இந்த ரயில் சேவை இருக்காது. தினமும் காலை 5.45 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தார்வாருக்கு பிற்பகல் 12.40 மணிக்கு சென்றடையும்.

இரு நகரங்களுக்கு இடையே 489 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் சராசரியாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கி கடக்கும்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்கத் தொடங்கியுள்ளது. இதில் நவீன வசதிகள் உள்ளதால், அதிக பயணிகளை ஈர்த்து வருகிறது. அதிவேகம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.. 

குறிப்புச் சொற்கள்