ஏழு குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்ற ஆடவர் காவல்துறையிடம் சிக்கினார்

ஏழு குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்ற ஆடவர் காவல்துறையிடம் சிக்கினார்

1 mins read
c747cef6-c252-4f42-a9ad-63583cb1e127
மும்பை நகரில் ஸ்கூட்டரில் ஏழு குழந்தைகளை வைத்து ஓட்டிச்சென்ற ஆடவர். - படம்: ஊடகம்

மும்பை: ஆடவர் ஒருவர், தனது ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் இரண்டு குழந்தைகள், பின்பக்கத்தில் மூன்று குழந்தைகள், நின்றவாறு இரண்டு குழந்தைகளுடன் பயணம் சென்றார்.

அதைப் பார்த்த பலர் அதைக் காணொளியாகப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் உலாவரச் செய்தனர்.

காணொளியைப் பார்த்த இணையவாசிகளில் பலர், அந்த ஆடவரைத் திட்டித் தீர்த்தனர். ஏழு குழந்தைகளின் உயிருடன் விளையாடிய அந்த ஆடவரை காவல்துறை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பினர். அதையடுத்து மும்பை போக்குவரத்துக் காவல்துறையினர் அந்த ஆடவரைக் கைதுசெய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்