தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலிக் கடப்பிதழ்; ஆப்கானிஸ்தானியர் கைது

1 mins read
9359aab0-a479-4bb8-83f4-5d3b88aad17b
தமிழ் முரசு - படம்: தமிழ் முரசு

மும்பை: மும்பை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லவிருந்த பயணிகளிடம் நடந்த குடியுரிமை சோதனையின்போது ஓர் ஆடவரிடம் போலிக் கடப்பிதழ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்களைக் கொண்டு இந்தியக் கடப்பிதழ் பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்துல் கடாவாசய் (வயது 43) என்பது தெரியவந்தது.

போலிக் கடப்பிதழ் மூலம் அவர் 2019ஆம் ஆண்டு மருத்துவ விசா பெற்று இந்தியா வந்து உள்ளார். இருப்பினும் விசா காலம் முடிந்தும் ஆப்கானிஸ்தான் திரும்பவில்லை. போலி ஆவணங்கள் மூலம் கோல்கத்தாவில் அப்துல் ரெகுமான் என்ற பெயரில் இந்திய கடப்பிதழைப் பெற்றிருக்கிறார். அவர் மீது மோசடி, இந்தியக் கடப்பிதழ் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்