லஞ்ச வழக்கில் ஊராட்சித் தலைவர் கைது

1 mins read
86a09f11-e960-4296-9b4c-d25b4866023a
படம்: - தமிழ் முரசு

ராஜபாளையம்: ஊராட்சித் தலைவர் ஒருவர் லஞ்ச ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கீழ ராஜகுல ராமன் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பொன் பாபாபாண்டியன்(50), வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்காக அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.17,600 தொகையை செலுத்தி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து(70) கூடுதலாக ரூ.10,000 கேட்டு, பின் ரூ.6,000 தருமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பொன் பாபாபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.

திங்கள்கிழமை காலை பொன் பாபாபாண்டியன் ஊராட்சித் தலைவர் காளிமுத்துவிடம் ரூ.6,000 லஞ்சம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்துவைக் கைது செய்தனர்.

இதனால் ஊராட்சித் தலைவர் காளிமுத்துவை மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து ஊராட்சி நிர்வாகப் பொறுப்பை துணைத் தலைவர் குருவையா மற்றும் செயலர் கருத்தபாண்டி வசம் ஒப்படைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.

அதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாகத்தை மேற்கொள்ளக் கோரி ராஜபாளையத்தில் கீழ ராஜகுல ராமன் என்ற ஊரில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைதையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்