சென்னை: 2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போதுமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் தயார்நிலையில் உள்ளன.
ஏதேனும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதைச் சரிபார்த்து அவற்றைச் சரிசெய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் இந்தப் பணி தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஜூலை ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளுக்குள் 18 வயது நிறைவடைந்தவர்கள் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று திரு சத்யபிரதா கூறினார்.