தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேதி உரத்திற்குப் பதிலாக மாற்று உரத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்

1 mins read
7330649f-4d06-448c-8943-bd91217a3af3
ஆறு உர உற்பத்தி ஆலைகள் உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

வேதி உரம் பயன்படுத்துவதற்குப் பதில் இயற்கை அல்லது மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், வேதி உரங்களுக்குப் பதில் மாற்று உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் வேளாண் துறை சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியா யூரியா உரங்களை இறக்குமதி செய்வதைக் குறைக்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு யூரியா மானியத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆறு உர உற்பத்தி ஆலைகள் உருவாக்கும் திட்டம் குறித்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்