இந்திய அரசாங்கத்துக்கு எதிரான டுவிட்டரின் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

இந்திய அரசாங்கத்துக்கு எதிரான டுவிட்டரின் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

1 mins read
97a9df59-eba9-4343-a827-2e05b45f382d
டுவிட்டருக்கு ஐந்து மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூர்: இந்திய அரசாங்கம் விடுத்த ஆணைக்கு எதிராக பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடாக மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதோடு, டுவிட்டருக்கு ஐந்து மில்லியன் ரூபாய் (82,626 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் இடம்பெறும் சில டுவீட் பதிவுகளையும் கணக்குகளையும் பிறர் பார்க்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்தியாவின் மத்திய அரசாங்கம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து டுவிட்டர் மனுத் தாக்கல் செய்திருந்தது.

2021ஆம் ஆண்டில் இந்தியாவில் சில விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டங்களை விமர்சித்த கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் டுவிட்டரை முடக்கப்போவதாக இந்தியா மிரட்டியதென அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் துணை நிறுவனருமான ஜேக் டோர்சி குறைகூறியிருந்தார். அதைப் பொய் என்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் எடுத்துரைத்தது.

இந்த விவகாரத்தில் தனக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்க டுவிட்டர் நடந்துகொள்ளவில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்