டெல்லி மாநிலத்தில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர ஜெயின் இருவரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
அதிஷியிடம் நிதி, திட்டம் மற்றும் வருவாய் துறைகளை கூடுதலாக வழங்க இருக்கிறார்.
தற்போது அதிஷி மின்சாரம், கல்வி, கலை, கலாசாரம் மற்றும் மொழி, சுற்றுலா, உயர்கல்வி, பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மக்கள் தொடர்பு ஆகிய எட்டு இலாக்காக்களுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் இரண்டு இலாக்காக்களை சேர்க்கும்போது அவர் 10 துறைகளுக்கு அமைச்சராக இருப்பார்.

