தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திரா தொழிற்சாலையில் வெடி விபத்து: பலர் சிக்கித் தவிப்பு

1 mins read
8ae0f9b5-85f3-4ec0-b6d1-63816059824a
சம்பவம் நடந்த இடத்தில் 35 பேர் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது - படம்: இணையம்

ஆந்திரா: ஆந்திர, அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரத்தில் உள்ள ‘பார்மா’ மருந்தக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் 35 பேர் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் எழுவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை 80 விழுக்காட்டு தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரசாயன கலவை இருந்த இரு பாய்லர்கள் வெடித்து சிதறியதில் தீ ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
ஆந்திராவிபத்து