ரவுடியிடம் பறித்த நிலத்தில் வசதி குறைந்தோருக்கு வீடுகள்

ரவுடியிடம் பறித்த நிலத்தில் வசதி குறைந்தோருக்கு வீடுகள்

இந்திய ஊடகம்

01 Jul 2023 - 7:18 pm

1 mins read

புதுடெல்லி: குண்டர் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கியுள்ளது உத்தரப் பிரதேசம்.

அம்மாநிலத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அத்தீக் அகமது. அவர் மீதும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீதும் 100க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இருவரும் காவல்துறை நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்குகளின்போது அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த நிலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த இடங்களில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (நகர்ப்புறம்) திட்டத்தின்படி வீடுகள் கட்டப்பட்டு வந்தன. ஒவ்வொரு வீடும் 41 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அறைகள், ஒரு சமையலறை, ஒரு கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. 76 வீடுகள் குலுக்கல் மூலம் வசதிகுறைந்தோருக்கு வழங்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.

“மாஃபியாக்களிடமிருந்த நிலங்களை அரசு பறிமுதல் செய்து அதில் ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறது. இது உத்தரப் பிரதேச அரசின் மகத்தான சாதனை,’’ என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்