ரூ.232 கோடியில் 60 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்

1 mins read
07bd18f0-77d4-400f-9850-6ebe430010e4
-

சென்னை: சென்னையில் ரூ.232 கோடி ரூபாய் செலவில் 60 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட உள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழக அரசு வல்லுநர்களின் கருத்தைப் பெற்று சென்னை மாநகராட்சி செயல்திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது என்றார்.

“கொரோனா தொற்று காலகட்டத்தில் வல்லுநர்களின் கருத்தை ஏற்று பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் கொரோனாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றோமோ, அதேபோல் காலநிலை மாற்றத்தை ஒவ்வொரு தனி மனிதரின் விழிப்புணர்வு மற்றும் செயல்பட்டால் நிச்சயம் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும்,” என்றார் ராதாகிருஷ்ணன்.

குறிப்புச் சொற்கள்