ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்த இந்திய விஞ்ஞானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

1 mins read
bc12908c-a243-4521-9d01-03b59dd544ac
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி பிரதீப் குருல்கரை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் புனே செசன்ஸ் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ.) விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை கைத்தொலைபேசி மூலம் ஒருவரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஒ. ஊழியர் ஒருவர் மகாராஷ்டிர மாநில பயங்கர[Ϟ]வாதத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த மே மாதம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பிரதீப் குருல்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் பாகிஸ்தான் பெண் உளவுத்துறை அதிகாரி ஒருவர், காதல்[Ϟ]வயப்படுவதுபோல் நடித்திருக்கிறார்.

அவரிடம் மயங்கிய இந்திய விமானி பிரதீப் குருல்கர், ராணுவ ரகசியங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண் வாட்ஸ்அப் மூலம் அவரிடம் ஆபாசமாகப் பேசியது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பயங்கர[Ϟ]வாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமையன்று விஞ்ஞானிக்கு எதிராக ஆயிரம் பக்கக் குற்றப்பத்திரிகையை புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

உளவு பார்த்தல், வெளிநாட்டு உளவுத்துறையினருடன் தொடர்பில் இருத்தல், தவறான தகவல் தொடர்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விஞ்ஞானி ‘சாராதாஸ் குப்தா’ என்ற பெயரில் செயல்பட்ட பாகிஸ்தான் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்