லக்னோ: பொது சிவில் சட்டத்தை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அதேவேளையில், அதைவைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை அரசியலாக்கி, அமல்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று மாயாவதி கூறியுள்ளார்.
நம் நாட்டில் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அதைக் கவனத்தில் கொண்டுதான் இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். எனவே, இதை அமல்படுத்தும் முன்னர் பொது வாக்கெடுப்பு மூலம் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.