கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பின்னர் அக்கட்சி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதந்தோறும் பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஏழை எளியவர்களுக்கு மாதந்தோறும் ஐந்து கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள ஐந்து கிலோ இலவச அரிசியை வழங்குவதற்கு அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலையில் அரசு இருக்கிறது.
எனவே, அரிசிக்குப் பதில் ரொக்கம் வழங்கப்படும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். இது தற்காலிக ஏற்பாடு மற்றும் அரிசி கொள்முதல் செய்யும்வரை மாற்று வழி என்று சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

