ரூ.1 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளுக்கு ரூ.90 லட்சம்
திண்டுக்கல்: ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளைக் கொடுத்தால் ரூ.90 லட்சம் கழிவு தருவதாகக் கூறி பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஷாஜகான் என்பவரிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை ஒப்படைத்தால் கழிவுத்தொகையாகப் பெரும் பணம் கிடைக்கும் என்று சக்திவேல் என்பவரிடம் குணசேகர், ராஜசேகர் என்ற இரண்டு பேர் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
அதையடுத்து சக்திவேல் ரூ.1 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளுடன் கொண்டம்நாயக்கனூர் என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு ரூ.90 லட்சம் பணத்துடன் குணசேகர், ராஜசேகர், ஷாஜகான் மூவரும் காத்திருந்தனர்.
திடீரென சக்திவேல் அந்த மூவரையும் மிரட்டத் தொடங்கினார். கத்தியைக் காட்டி பயமுறுத்திய சக்திவேல் அந்த மூவரிடம் இருந்த ரூ.90 லட்சத்தைப் பறித்துக்கொண்டார். மூவரையும் ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு ஒரு காரில் சக்திவேல் தப்பி ஓடிவிட்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.
சக்திவேல் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட பலரையும் காவல்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
பலாப்பழத்தை ருசித்த பாகுபலி யானை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட சமயபுரம், நெல்லிமலை வனப்பகுதிகளில் நடமாடிய பாகுபலி யானை தற்போது வாயில் காயத்துடன் சுற்றித்திரிகிறது.
தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதுமனை யானைகள் முகாமில் இருந்து இந்த யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.
இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறுகையில், பாகுபலி காட்டுயானைக்கு வலியின் தாக்கம் அதிகம் உள்ளதால் தான் கடந்த வாரம் தாசனூர் பகுதியிலுள்ள கோவில் சுவரை உடைத்துச் சென்றுள்ளது. எனவே யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்கவேண்டும் என தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நேற்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஒரே இடத்தில் நின்று 3 மணி நேரம் பலா பழத்தை ருசித்துள்ளது. தொடர்ந்து பாகுபலி யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

