தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம்

பொது சிவில் சட்டத்திற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு

1 mins read
258c8c2f-0f5c-4818-80ef-2950617d5ecf
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா. - படம்: ஊடகம்

மத்திய அரசு அமலாக்கவிருக்கும் பொது சிவில் சட்டத்திற்கு முஸ்லிம்களும், சீக்கியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்போது பழங்குடியின மக்களும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்[Ϟ]படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தாங்கள் இன்றுவரை பின்பற்றி வரும் பாரம்பரியப் பழக்க வழக்கங்களுக்கு முடிவுகட்ட நேரிடும் என்று அவர்கள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

திருமணம், மணமுறிவு மற்றும் குழந்தை தத்தெடுப்பு ஆகியவை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேகாலயாவில் தனித்துவம் பெற்றவை. பொது சிவில் சட்டத்தால் இந்தப் போக்கு பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, அம்மாநில முதல்வர் கான்ராட் கே.சங்மா, இந்தச் சட்டம் இறையாண்மைக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னணியின் உறுப்பினராக இருக்கிறார்.

“இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, பன்முகத்தன்மையே நமது பலம். பொது சிவில் சட்டம் என்பது இந்திய சிந்தனைக்கு எதிரானது” என்று மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியுள்ளார்.

நாகா பழங்குடியில் பெண்களுக்கு சொத்து உரிமை அளிப்பதில்லை. இது போன்ற தம் பாரம்பரிய வழக்கங்களை பொது சிவில் சட்டத்தால் கைவிட வேண்டி இருக்கும் என அஞ்சுகின்றனர்.

மிசோராம், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலோர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

பொது சிவில் சட்டத்திற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அச்சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்