எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் ஒத்திவைப்பு

1 mins read
c2b44fe5-2a2c-42d0-abe6-ffadf52825bd
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால். - படம்: ஊடகம்

பெங்களூர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஏற்பாட்டின் பேரில், எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 17,18 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்