ரூ.2000 நோட்டுகளை மீட்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

1 mins read
9542714a-9a69-4fe2-a1c9-2f3b77b101d4
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மும்பை வங்கி ஒன்றில் வரிசை பிடித்து நிற்கிறார் இவர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: கடந்த மே 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் மீட்டுக்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் அவற்றை மீட்டுக் கொள்ளும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை, அந்த உரிமை மத்திய அரசுக்கே உள்ளது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, இது பொருளியல் கொள்கை சார்ந்தது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

குறிப்புச் சொற்கள்