தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்பைஸ்ஜெட் ஆக அதிகம் தாமதமடைந்த இந்திய விமானச் சேவை

1 mins read
b8652415-86d4-4659-a369-0fdc254ff7bf
ஸ்பைஸ்ஜெட் விமானம். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானச் சேவைகள்தான் ஆக அதிக முறை தாமதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 விழுக்காடு ஸ்பைஸ்ஜெட் சேவைகள் மட்டுமே நேரத்துக்கு விமான நிலையங்களிலிருந்து புறப்பட்டன. மும்பை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் சேவைகளுக்கு இது பொருந்தும். இந்த நான்கும் இந்தியாவின் ஆகப் பெரிய விமான நிலையங்கள்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 70 விழுக்காடு ஸ்பைஸ்ஜெட் சேவைகள் நேரத்துக்குப் புறப்பட்டன. இப்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்கு முன்பிருந்தே நேரத்துக்குப் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் சேவைகளின் எண்ணிக்கை குறைந்தது.

இந்தியாவின் சிவில் விமானத் துறை இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணத் துறை சூடுபிடிக்கும். எனவே இவ்வேளையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

இந்தியாவின் இரண்டாவது ஆகப் பெரிய பயணிகள் விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் சேவைகளும் அதிகம் தாமதமடைந்திருக்கின்றன. எனினும், சில மாதங்களுக்கு முன்பு நேரத்துக்குப் புறப்பட்டன.

இந்தியா, உலகளவில் விமானத்துைறையில் ஆக வேகமாக வளரும் நாடு. கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிந்திய காலத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்; அதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்