திருட்டு பயம்; கண்காணிப்பு கேமரா வைத்து தக்காளி விற்கும் வியாபாரி

திருட்டு பயம்; கண்காணிப்பு கேமரா வைத்து தக்காளி விற்கும் வியாபாரி

2 mins read
2f9abb85-e217-4b1b-bd13-0181b81ca0c5
தக்காளி விற்பனை - ஏஎஃப்பி

திருவனந்தபுரம்: ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. திருடுவதற்காக ஒரு கூட்டம் சுற்றுகிறது.

நாட்டில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு தக்காளியின் கிடு கிடு விலையேற்றம்தான் காரணம். ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள், மாதுளை பழங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தக்காளியின் விலையும் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விலை உயர்வால், தக்காளி திருட்டை தடுப்பதற்காக விவசாயி ஒருவர் தனது கடையில் கண்காணிப்பு கேமராவை வைத்த சம்பவம் கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நடந்துள்ளது.

ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா அக்கிஅலுரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவர் ஒரு விவசாயி. இவர் அந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவர் தனது கடையில் தக்காளியை விற்பனை செய்கிறார். இந்நிலையில் விலை உயர்வால் சில இடங்களில் தக்காளிகள் திருடப்படுவதால் பயந்துபோன கிருஷ்ணப்பா, தனது கடையில் தக்காளி திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா ஒன்றை வைத்துள்ளார். சாலையோர கடையில் தக்காளி பெட்டியில் கண்காணிப்பு கேமராவை வைத்துள்ளார். இதுகுறித்து கருத்துரைத்த கிருஷ்ணப்பா, தற்போது தக்காளி விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி அனைவரும் வாங்கும் ஒரு பொருள் என்பதால், அதை வாங்காமல் இருக்க முடியாது.

இதனால் தக்காளியை திருடுவதற்காக ஒரு கூட்டம் அலைகிறது. மேலும் கூடுதல் தக்காளி வேண்டுமென வாங்குபவர்களும் தகராறு செய்கிறார்கள். கண்காணிப்பு கேமரா இருந்தால் இதுபோன்ற பிரச்சினையால் எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்