மேகாலயா: மேகாலயா மாநிலம் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஸ்மிட் நகரில் மின்சார மெத்தை வெடித்ததில் பின்சுக்லாங் எனும் ஆடவர் உயிரிழந்தார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை அவரது வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
அது குறித்துப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது பின்சுக்லாங் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.
விசாரணையில் மின்சார மெத்தை வெடித்து அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
அளவுக்கு அதிகமாக அந்த மின்சார மெத்தை மின்னூட்டம் செய்யப்பட்டதால் விபத்து நேரிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்சுக்லாங் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவர் ஏற்கனவே மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் குடும்பத்தினர் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

