தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூர்: பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

2 mins read
66c5f692-e861-49c0-815a-57b4a9498368
-

மணிப்பூர்: மணிப்பூரில் பழங்குடியினர்களுக்கு இடையே நடந்து வரும் கலவரத்திற்குத் தீர்வுகாணப்படாத நிலையில், பள்ளிகள் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பள்ளி திறக்கப்பட்டதற்கு மறுநாளே இம்பாலில் உள்ள உரு பள்ளியில், பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

காங்போக்பி மாவட்டத்தில் மாபாவோ மற்றும் அவாங் செக்மி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு ஆயுத குழுக்களுக்கு இடையிலான மோதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு அடுத்த நாள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால், சம்பவம் நடந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இறந்த பெண் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் மாபாவோ மற்றும் அவாங் செக்மி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு ஆயுத குழுக்களுக்கு இடையிலான மோதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில், காவல்துறையினரின் ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்களைக் கடத்தவிருந்த கலவரக்காரர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தவுபால் மாவட்டத்தில் உள்ள துணை ராணுவ வீரர் ஒருவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் ஜூலை 10ஆம் தேதி வரை மேலும் ஐந்து நாட்களுக்கு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது

மைத்தி சமூக மக்களுக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் மோதலில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

குறிப்புச் சொற்கள்